Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Search This Blog

Showing posts with label Award. Show all posts
Showing posts with label Award. Show all posts

Saturday, 9 November 2013

அறிவியல் ஆராய்ச்சி விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

சென்னை ஐஐடி., அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு சயின்ஸ் சிட்டி இவ்வமைய்பு சார்பாக, 'தமிழ்நாடு இளம்பெண் விஞ்ஞானி விருது' வழங்கப்பட இருக்கிறது. வேளாண் அறிவியல், வேதியியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், ஹோம் சயின்ஸ், லைப் சயின்ஸ், கணித அறிவியல், மருத்துவ அறிவியல், சமூக அறிவியல், கால்நடை மருத்துவ அறிவியல், சமூக அறிவியல், கால்நடை மருத்துவ அறிவியல், உடற்கல்வியியல் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் பெண்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
இதில் இளம்பெண் விஞ்ஞானி விருது 40 வயதுக்குக் கீழுள்ள 4 பேருக்கும், வாழ்நாள் சாதனையாளர் விருது 60 வயதுக்கு மேல் உள்ள ஒருவருக்கும் வழங்கப்பட உள்ளது.
ரொக்கப்பரிசும், கேடயமும் கொண்ட இவ்விருதுக்கு விண்ணப்பிக்க, socicity@dataone.in, sciencecityhemaa@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிகளுக்குக் கடிதம் அனுப்ப வேண்டும். டிசம்பர் 17 விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு, சென்னை காந்தி மண்டபம் சாலையில் அமைந்துள்ள அறிவியல் நகர அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-24454054, 044-24454034 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, 30 October 2013

சென்னை மாநில கல்லூரி விலங்கியல் பேராசிரியருக்கு “சிறந்த விஞ்ஞானி விருது”


சென்னை மாநில கல்லூரி விலங்கியல் உயிர் தொழில்நுட்பத்துறை தலைவராக பணியாற்றுபவர் பேராசிரியர் ப.மரிய சார்லஸ். ஆராய்ச்சி விஞ்ஞானியாக சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்துவிட்டு, தற்போது மாநில கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் இரால் மீன் வளர்ப்பு தொழில்நுட்பத்தில் 50-க்கு மேல் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு 30-க்கு மேல் பி.எச்.டி மற்றும் எம்.பில் பட்டங்களை மாணவர்களுக்கு பெற்று கொடுத்துள்ளார். இதற்கு உலக மற்றும் தேசிய அளவிலான பல விருதுகளை பெற்றிருக்கிறார். வேதியியல் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதால் இரால் மீன் வளர்ப்பு பாதிக்கிறது என்ற இவரது ஆராய்ச்சிக்கு “சிறந்த விஞ்ஞானி விருது 2013” டெல்லியில் தேசிய சுற்றுப்புறச்சூழல் விஞ்ஞான அகாடமி வழங்கி உள்ளது.

இவர் கன்னியாகுமரி மாவட்டம் மேலப்பெருவிளையை சேர்ந்தவர் ஆவார்.