உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பால்வளத் துறையின் வளர்ச்சி 15 முதல் 20 சதவீதம்வரை அதிகரித்து வருவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த துறையில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பே இல்லை. மனித வாழ்க்கையில் பால் அத்தியாவசியமாகிவிட்டது. படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவரும் வேலைவாய்ப்புப் பெறுவது இத்துறையில் மட்டுமே சாத்தியம். பால் வளம் தொடர்பான படிப்புகளைப் படிப்பதன் மூலம் ஏராளமான பணி வாய்ப்புகளைப் பெற முடியும்.
என்ன படிப்பு?
எம்.டெக்., டெய்ரி தொழில்நுட்பம், பால் ப்ராசஸிங் மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள் தொடர்பான படிப்பாகும். இது ஒரு தனித்துவமான படிப்பு. ஏனெனில், குறிப்பிட்ட தயாரிப்பு பொருட்கள் மற்றும் அதன் ப்ராசஸிங் தொடர்பான விஷயங்களை இப்படிப்பு வழங்குகிறது. இதைப் படிப்பதன் மூலம் டைரி தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம், பால் மற்றும் பால் பொருட்களின் உயிர்சிதை மாற்றம், சவ்வுத் தொழில்நுட்பம், ஆரோக்கிய உணவுகளின் நன்மைகள் ஆகியவற்றை அறிய முடியும்.
பணி வாய்ப்புகள்
எம்.டெக். டெய்ரி தொழில்நுட்பம் படிப்பை முடித்தபிறகு டைரி கம்பெனிகள், பால்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், பால் சாதன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் டைரி பிளாண்டுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன. பால் தயாரிப்பு யூனிட் வைத்தும் தொழில் செய்ய முடியும்.
எங்கு படிக்கலாம்?
கேரளாவில் உள்ள பால் ஆராச்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் கால் நடை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், உதய்பூரில் உள்ள பால் அறிவியல் கல்லூரியில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. மேலும் மும்பையில் உள்ள பால் தொழிநுட்பம் மற்றும் பால் அறிவியல் நிறுவனத்திலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது.
தேர்வு முறை
பால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பி.டெக். முடித்தவர்கள், இப்படிப்பை படிக்க தகுதியானவர்கள். நுழைவுத் தேர்வு, நேர்காணல் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
No comments:
Post a Comment