
சென்னை மாநில கல்லூரி விலங்கியல் உயிர் தொழில்நுட்பத்துறை தலைவராக பணியாற்றுபவர் பேராசிரியர் ப.மரிய சார்லஸ். ஆராய்ச்சி விஞ்ஞானியாக சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்துவிட்டு, தற்போது மாநில கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் இரால் மீன் வளர்ப்பு தொழில்நுட்பத்தில் 50-க்கு மேல் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டு 30-க்கு மேல் பி.எச்.டி மற்றும் எம்.பில் பட்டங்களை மாணவர்களுக்கு பெற்று கொடுத்துள்ளார். இதற்கு உலக மற்றும் தேசிய அளவிலான பல விருதுகளை பெற்றிருக்கிறார். வேதியியல் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவதால் இரால் மீன் வளர்ப்பு பாதிக்கிறது என்ற இவரது ஆராய்ச்சிக்கு “சிறந்த விஞ்ஞானி விருது 2013” டெல்லியில் தேசிய சுற்றுப்புறச்சூழல் விஞ்ஞான அகாடமி வழங்கி உள்ளது.
இவர் கன்னியாகுமரி மாவட்டம் மேலப்பெருவிளையை சேர்ந்தவர் ஆவார்.
No comments:
Post a Comment