Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Search This Blog

Monday 27 January 2014

வேலையற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி:-
வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களுக்கு அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்த தகுதியான பதிவுதாரர்கள் சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும். பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்த பதிவுதாரர்கள் நந்தனத்தில் தொழில் திறனற்றோருக்கான வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.
2013 டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியானவர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்தவர்கள் கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். அவர்களுக்கு கல்வித் தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு இல்லை.
தகுதியுடைய பதிவுதாரர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் ஓராண்டு நிறைவடைந்தவர்கள், சுய உறுதிமொழி ஆவணத்துடன், பதிவு எண் மற்றும் உதவித் தொகை எண் ஆகியவற்றை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment